யாருமே பொருட்படுத்துவதில்லை.!
யாருமே
பொருட்படுத்துவதில்லை..
ஒரு குழந்தையின்
அழுகையை.!
யாருமே
பொருட்படுத்துவதில்லை..
ஒப்பாரி வைக்கும்
நீரற்ற நதிகளை.!
யாருமே
பொருட்படுத்துவதில்லை..
வெறுமையாகிப்
போகும் விவசாயத்தை.!
யாருமே
பொருட்படுத்துவதில்லை..
இணையமில்லா
உறவுகளை.!…