யஷஷ்வி ஜெய்ஸ்வால் – வறுமை பெற்றுத்தந்த ஹீரோ!
விராட் கோலி இல்லாத சூழலில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா என்ன பாடுபடப் போகிறதோ என்று ரசிகர்கள் கவலைப்பட்டுக்கொண்டு இருந்தார்கள். இந்த நேரத்தில் ‘நான் இருக்கும்போது கவலை எதற்கு?’ என்று களத்தில் குதித்து சாதித்திருக்கிறார் யஷஷ்வி ஜெய்ஸ்வால். இந்த டெஸ்ட் தொடரில் இதுவரை நடந்த 3 போட்டிகளில் மட்டும் ஜெய்ஸ்வால் குவித்திருக்கும் ரன்கள் 545. இந்த தொடரில் மட்டும் அவரது சராசரி ரன்கள் 109. ஒரே தொடரில் அடுத்தடுத்து 2 இரட்டை சதங்கள் அடித்தது, அதிகபட்சமாக […]
காயத்தால் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின்!
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது 500-வது விக்கெட்டை தட்டித் தூக்கியிருக்கிறார் ரவிச்சந்திரன் அஸ்வின். இதன்மூலம் மிகக் குறைந்த போட்டிகளில் (98) 500 விக்கெட்களை வீழ்த்திய 2-வது வீரர் (முதல் இடம் முரளிதரன்) என்ற சாதனையையும் படைத்திருக்கிறார் அஸ்வின். அஸ்வினின் இந்த சாதனைக்காக சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலரும் அஸ்வினை பாராட்டி வருகிறார்கள். கிரிக்கெட் உலகில் முத்தையா முரளிதரனுக்கு பிறகு விக்கெட் சாதனை புரிந்த தமிழரான அஸ்வினைப் பற்றி தெரிந்து கொள்வோம். அஸ்வினின் அப்பா ரவிச்சந்திரன் […]
விளையாட்டுத் துறையில் தமிழகத்தை முன்னிலைப்படுத்தும் முயற்சி!
கேலோ இந்தியா என்பது இந்தியாவில் விளையாட்டு வளர்ச்சிக்கான ஒரு தேசிய திட்டமாகும். இது 2018-ம் ஆண்டு டெல்லியில் அப்போதைய விளையாட்டு அமைச்சர் கர்னல் ராஜ்யவர்தன் சிங் ரத்தோரால் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் தேசிய வளர்ச்சி, பொருளாதார மேம்பாடு, சமூக மேம்பாடு மற்றும் தனிமனித வளர்ச்சிக்கான கருவியாக விளையாட்டை மையப்படுத்துவது இதன் நோக்கமாகமாகும். கேலோ இந்தியா மூலம் இந்தியாவில் விளையாட்டுப் போட்டிகள் கடந்த 2018-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. 2020-ம் கொரோனா தொற்று காரணமாக போட்டிகள் நடத்தப்படாத […]
டி20 தொடரில் உலக சாதனை படைத்த ரோகித் சர்மா!
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை முழுமையாக கைப்பற்றி ஆப்கானிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது. இந்த ஆட்டத்தில் சதமடித்து அசத்திய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆட்டநாயகன் விருதையும் வென்றார். அதோடு, இந்தப் போட்டியில் பல்வேறு சாதனைகலையும் அவர் படைத்துள்ளார். அதில், டி20 கேப்டனாக அதிக சிக்சர்கள் அடித்தவர் என்ற எய்ன் மோர்கனின் உலக சாதனையை […]
சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படுவதே வெற்றிக்கு வழி!
இந்திய கிரிக்கெட் வீரர் சமி! உலகக் கோப்பைத் தொடரின் தொடக்கத்தில் சில லீக் ஆட்டங்களில் அணியில் இடம்பெறாத முகமது சமி அதன்பின் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். தற்போது இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக சமி கொண்டாடப்பட்டு வருகிறார். இந்த உலகக் கோப்பைத் தொடரில் 6 போட்டிகளில் மட்டுமே விளையாடி, இதுவரை 23 விக்கெட்டுகளை சமி கைப்பற்றியுள்ளார். நடப்பு உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராகவும் சமி கொண்டாடப்பட்டு வருகிறார். […]
உலகக் கோப்பைக் கிரிக்கெட்: நியூசிலாந்தை பழிதீர்த்த இந்தியா!
நடப்பு உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டி மும்பை வான்கடே திடலில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மாவும் சுப்மன் கில்லும் சிறப்பான துவக்கத்தைக் கொடுத்தனர். ரோகித் சர்மா 29 பந்துகளில் 47 ரன்களும் சுப்மன் கில் 65 பந்துகளில் 79 ரன்களையும் குவித்தும் வெளியேறினர். அடுத்து வந்த விராட் கோலி சிறப்பாக விளையாடி ரன்களைக் குவித்தார். […]





