காதலைக் காதலாகவே கைக்கொள்வோம்!

எத்தனை முறை மறுத்தாலும் காதலின் சுவை உப்பு தான் கலக்கும் தன்மை கொண்டதுதான் கலந்த பின் திசையறியாமல் திகைக்கும் விழிகொண்டது அதனை என்ன செய்ய? உட்புகும் வழியும் வெளிவரத் தெரியாத பைத்திய நிலையும் வெற்றிப்பறையில் எழும் சத்தம் வேகாள வெப்பத்தோடு உயர்வதுபோல தகிக்கும் அகம் வாய்த்த மாய உடல் காதலைப் போற்றுவதற்கு இதற்கு மேல் அதிகாரம் ஏதேனும் உண்டா? காலச்சக்கரத்தை மூளையாகப் பெற்றது காதல் இன்றி வேறு என்ன? தட்டையாகப் பறந்து செல்லமுடியாத ஆழங்களை வேராகப் பெற்ற […]

அன்பின் சாலை இன்று அங்காடிச் சாலை!

படித்ததில் ரசித்தது: பெண் வேண்டும் என்று கேட்காமல்… ‘வாழை மரம் வேண்டும்’, ‘விதை நெல் வேண்டும்’ என்று கேட்கிற ஒரு வழக்கம் நம்மிடம் இருந்திருக்கிறது. இன்று நாம் அந்த வழக்கத்தை மாற்றிவிட்டோம். மாவு அரைக்கும் எந்திரம், துணி துவைக்கும் எந்திரம், கட்டில், கார், வீடு, தங்கம் என்று தனித்தனியாகக் கேட்காமல் ஒட்டுமொத்தமாக ‘ஒரு பெண் வேண்டும்’ என்று கேட்கிறோம். அன்பின் சாலை இன்று அங்காடிச் சாலை… – பழநிபாரதி

பிரபலங்களுக்குப் பிடித்த புத்தகங்கள்!

சென்னை புத்தகக் கண்காட்சி நடைபெற்று வரும் நிலையில், அங்கு இடம்பெற்றுள்ள பிடித்த புத்தகங்கள் பற்றி, பல்வேறு துறைகளில் பிரபலமாக உள்ள 10 ஆளுமைகள் தங்களது வாசகர்களுக்காக பகிர்ந்து கொண்டவை. 1. ச. தமிழ்ச்செல்வன், எழுத்தாளர் 1. சத்தியசோதனை, மகாத்மாகாந்தி, நவஜீவன் பிரசுராலயம். 2. திருக்குறள், மு. வரதராசனார் உரை, சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழகம். 3. பாரதியார் கவிதைகள், மாணிக்கவாசகர் பதிப்பகம். 4. ஆதி இந்தியர்கள், டோனி ஜோசப், மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ். 5. ஒரு பண்பாட்டின் […]

அளவிட முடியா அம்மாவின் அன்பு!

வாசிப்போம் ரசிப்போம்: கருகிவிடுமெனும் பரபரப்பில் கைசுட்டுக் கொண்டது எத்தனையாவது முறையெனச் சொல்ல முடியாது அம்மாவால்…! – யுகபாரதி

இருளின் இன்னொரு முகம்!

‘நட்சத்திரங்களை விட நிறையவே பேசுவது அவற்றின் இடையுள்ள இருள்’ – பிரமிளின் நினைவுநாளையொட்டி அவரது கவிதைத் தொகுப்பிலிருந்து…

‘மகா கவிதை’ நூல் வெளியீட்டு விழாத் துளிகள்!

2024, சனவரி முதல் தேதி அன்று சென்னை காமராஜர் அரங்கில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய ‘மகா கவிதை’ நூல் வெளியீட்டு விழா அரங்கு நிறைந்த கூட்டத்துடன் நடந்தது. விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ப.சிதம்பரம், கமல்ஹாசன், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டது விழாவின் சிறப்பம்சம். விழாவில் வெளியிடப்பட்ட ‘மகா கவிதை’ நூலின் அட்டைப் படத்தை வடிவமைத்தவர் வைரமுத்துவின் மகனான மதன் கார்க்கி. திரைப்படப் பாடலாசிரியரான இவர் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்துடன் உருவாக்கிய […]