எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் தொழிலில் மட்டுமே போட்டி!

எம்.ஜி.ஆரும் சிவாஜியும் சிறு வயது முதலே அண்ணன் – தம்பியாக வளர்ந்தவர்கள்தான். இருவருமே பல வருடங்கள் நாடகங்களில் நடித்துவிட்டு பின் சினிமாவுக்கு வந்தவர்கள். நாடகங்களில் நடிக்கும்போது பல நாட்கள் எம்.ஜி.ஆரின் வீட்டில்தான் சிவாஜி சாப்பிடுவார். அதேபோல், எம்.ஜி.ஆரும் சிவாஜியின் வீட்டிற்கு சென்று சாப்பிடுவார். சிவாஜி ‘பராசக்தி’ எனும் முதல் படத்திலேயே ஹீரோவாக நடித்து பிரபலமானார். எம்.ஜி.ஆரோ 10 வருடங்கள் சின்னச் சின்ன வேடங்களில் நடித்த பின்னரே ‘ராஜகுமாரி’ படத்தில் ஹீரோவாக நடித்தார். நல்ல கதையம்சம் கொண்ட செண்டிமெண்ட் […]

கண்ணதாசன் எழுதிய பாடல்: அவருக்கே பலித்த வாக்கு!

தமிழ் சினிமாவில் மனிதனின் உணர்ச்சிகளை பாடல்கள் மூலம் வெளிப்படுத்திய கண்ணதாசன் எழுதிய ஒரு பாடல், பின்னாளில் அவருக்கே பலித்தது என்ற தகவல் பலரும் அறியாத ஒன்று. மனிதன் தன் வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகள் சந்தோஷங்கள் என அத்தனை உணர்ச்சிகளுக்கும் தனது பாடல்கள் மூலம் ஆறுதல் சொன்ன கவிஞர் தான் கண்ணதாசன். எம்.ஜி.ஆர் சிவாஜி தொடங்கி, ரஜினிகாந்த் வரை பல நடிகர்களுக்கு தனது பாடல்கள் மூலம் பெரிய வெற்றியை கொடுத்த கண்ணதாசன், சிவாஜி நடித்த ஒரு படத்திற்காக எழுதிய […]

க.சீ.சிவகுமார்: தழுவக் குழையும் நண்பன்!

– எழுத்தாளர் பாஸ்கர் சக்தி 1995-ம் ஆண்டு ஜூன் மாதத்தின் ஒரு இரவில்தான் க.சீ.சிவகுமாரை சந்தித்தேன். ஏப்ரல் மாதம் இந்தியா டுடே நடத்திய அறிமுக எழுத்தாளர் போட்டியில் அவன் முதல் பரிசும், நான் இரண்டாம் பரிசும் வென்றிருந்தோம். நான் எனக்கான மகிழ்ச்சியில் இருக்க அவனோ என்னைத் தேடி முகவரி அறிந்து போஸ்ட்கார்ட் அனுப்பி இருந்தான். அதன் கடைசி வரிகள் ‘என் கதையைவிடவும் உங்கள் கதைதான் நன்றாக இருப்பதாக என் நண்பர்கள் சொல்கிறார்கள். நானும் அவ்வாறே.. என் சகாவின் […]

இறகைப் போல மிருதுவானவர்!

-கே.பி. கூத்தலிங்கம். ’இலக்கியச் சிறகு’ சிற்றிதழின் ஆசிரியர் மு.ராமலிங்கம் ஜனவரி-13 ஆம் தேதி சனிக்கிழமை அதிகாலை காலமானார். இவர் இலக்கியச் சிறகு என்ற சிற்றிதழை 25 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடத்தி வந்தார். ஆங்கில கவிதைகளுக்காக ஷைன் (SHINE) என்னும் இதழையும் தொடர்ந்து தன் சொந்த பொருட்செலவில் நடத்தி வந்தார். இந்தியா முழுமையிலும் எல்லா மாநிலங்களிலிருந்தும் பல கவிஞர்கள் இந்த இதழில் தொடர்ச்சியாகப் பங்களித்து வந்தார்கள். நெய்தல் இலக்கிய வட்டம் என்னும் அமைப்பை நிறுவி மாதாந்திர இலக்கியக் […]

கட்சிப் பணத்தை சொந்த தேவைக்குப் பயன்படுத்துவது தப்பு!

– தோழர் ஜீவாவின் நேர்மை “பசிக்குது தோழா, நாலு இட்லி வாங்கிட்டு வாங்க, சாப்பிட்டுட்டுப் போவோம்” என்கிறார் ஜீவா. “இங்கேயே கேண்டீன் இருக்கு, சாப்பிட்டிருக்கலாமே தோழர்…” “சரிதான், எங்கிட்ட காசில்லைல்ல…” தோழர் போய் இட்லி வாங்கிக் கொண்டு வர, அதை சாப்பிட்டுவிட்டு தான் கொண்டு வந்த மூட்டையை எடுத்துக் கொண்டு ஜீவா கிளம்புகிறார். “கொடுங்க தோழர், அதை நான் கொண்டாறேன்” என்று ஜீவாவின் கையிலிருந்த மூட்டையை வாங்குகிறார் தோழர். அப்போதுதான் அது நோட்டுகளும், சில்லறைக் காசுகளும் அடங்கிய […]

என்.எஸ்.கிருஷ்ணன் எனக்காகப் பாடிய பாட்டு!

– சுந்தர ராமசாமி கிளம்பும் நேரம். மாமா, என்னுடைய அக்கா பையனுக்கு உடல்நிலை சரியில்லை. படுக்கையில் இருக்கிறான். மிக அருகில்தான் வீடு என்றதுமே வில்லுப்பாட்டு கோஷ்டியுடனேயே கிளம்பி வந்துவிட்டார் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். அவரும் புளிமூட்டையும் மட்டும் உள்ளே வந்து படுக்கைக்கு அருகில் நாற்காலியில் அமர்ந்துகொண்டு, என்ன உடம்புக்கு என்று கேட்டார். அம்மா விவரங்கள் சொன்னதும், கவலைப்படாதீர்கள். எனக்கு ஜோஸ்யம் தெரியாது. அதில் நம்பிக்கையும் இல்லை. இப்போ ஒன்று சொல்கிறேன். இன்னும் பத்து வருடத்தில் இந்தப் பையன் ஆரோக்கியம் […]