ஊரு பேரு பைரவகோனா – பயமுறுத்துகிற ‘பேண்டஸி’ கதையா இது?
சந்தீப் கிஷன். ‘யாருடா மகேஷ்’ மூலமாகத் தமிழில் அறிமுகமாகி ‘மாநகரம்’, ‘மாயவன்’ படங்கள் வழியே நம் கவனம் ஈர்த்தவர். தெலுங்கில் தொடர்ந்து இவர் வெற்றிப் படங்கள் தந்துவரும் ஒரு நடிகர். கடந்த ஆண்டு வெளியான ‘மைக்கேல்’ படத்தில் காதலிலும் ஆக்ஷனிலும் கலக்கிய இவர், தனுஷ் உடன் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் கௌரவத் தோற்றத்தில் தலைகாட்டியிருந்தார். தற்போது, அவர் நடித்துள்ள ‘ஊரு பேரு பைரவகோனா’ தெலுங்கில் வெளியாகியுள்ளது. இது ஒரு பேண்டஸி வகைமை திரைப்படம். தனது ஒவ்வொரு படமும் […]
பிரமயுகம் – நூற்றாண்டுகளாகத் தொடரும் கதை!
ஒவ்வொரு திரைக்கதையும் ஒரு உலகத்தைக் காட்டும். அது, முழுக்க முழுக்க அப்படத்தின் கதாசிரியரும் இயக்குனரும் இன்ன பிற கலைஞர்களும் சேர்ந்து உருவாக்கும் உலகமது. திரையில் படம் ஓடத் தொடங்கியவுடன் அதனுள் நுழையும் நாம், சில நேரங்களில் அது முடிந்தபின்னும் வெளியேற முடியாமல் தவிப்போம். கிட்டத்தட்ட அதே போன்றதொரு அனுபவத்தைத் தருகிறது ராகுல் சதாசிவன் இயக்கத்தில் மம்முட்டி, அர்ஜுன் அசோகன், சித்தார்த் பரதன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘பிரமயுகம்’. படம் முழுக்க கருப்பு வெள்ளை வண்ணங்களே நிறைந்திருக்கும் என்பதைச் சொன்னது […]
சைரன் 108 – ’ஜெயம் ரவி’க்கு மீண்டும் வெற்றி!?
’தனி ஒருவன்’, ‘எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’ இரண்டும் கலந்தது போன்று ‘சைரன் 108’ படம் இருக்கும். இதனைச் சொன்னவர் நடிகர், இயக்குனர் அழகம் பெருமாள். ‘சைரன் 108’ படத்திற்கான முன்னோட்டத்தின்போது, அவர் இதனைக் குறிப்பிட்டார். ஏன் இவ்வாறு சொன்னார்? ஜெயம் ரவி நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் அந்த அளவுக்கு சென்டிமெண்டும் ஆக்ஷனும் கனகச்சிதமாகப் பிணைந்திருக்கிறது என்பதே அவரது கருத்து. சரி, உண்மையிலேயே அப்படியொரு காட்சியனுபவத்தை ‘சைரன் 108’ நமக்குத் தருகிறதா? ’பரோல் கைதி’யாக நாயகன்! […]
மான்ஸ்டர் – நத்தையாக நகரும் திரைக்கதை!
உலக சினிமா என்று சொல்லப்படும் படங்களில் திரைமொழி தனித்துவமானதாக இருக்கும். கதையின் வேர் எதை நோக்கிப் பயணிக்கிறது என்று கண்டறியும் முன்னரே திரைக்கதை முடிவு பெற்றுவிடும். அதன் பிறகு வீடு திரும்பும் வழியில், நாமாக மனதுக்குள் அந்தக் கதையை ஓட்டிப் பார்த்து, அதில் நிகழ்ந்த மாற்றங்களை மீண்டும் உணர்ந்தபிறகு, அந்த திரைப்படத்தின் முழு பரிமாணமும் பரவத் தொடங்கும். அந்த வகையறாவைச் சேர்ந்ததே ஹிரோகஸு கோரே – எடாவின் இயக்கத்தில் வெளியாகியுள்ள ஜப்பானியப் படமான ‘மான்ஸ்டர்’. 2023-ம் ஆண்டு […]
அன்வேஷிப்பின் கண்டதும் – ‘கிளாசிக்’ த்ரில்லர் அனுபவம்!
த்ரில்லர் படங்கள் புதிய ட்ரெண்டை உருவாக்கினாலும், அந்த அலையைப் பின்தொடர்ந்து பெருமளவில் திரைப்படங்கள் வெளியாகச் சாத்தியம் கிடையாது. ஏனென்றால், தொடக்கம் முதல் இறுதி வரை ‘த்ரில்’ குறையாமல் கதை சொல்வது மிக அரிதாகவே நிகழும் அல்லது அதற்காகக் கடுமையாகப் பிரயத்தனப்பட வேண்டியிருக்கும். சமீபத்திய ஆண்டுகளில் வெளியான திரைப்படங்களில், மலையாளத்தில் ‘அஞ்சாம் பதிரா’, தமிழில் ‘போர்தொழில்’ போன்ற மிகச்சிலவே அந்த மாயாஜாலத்தை நிகழ்த்தியிருக்கின்றன. இவை இரண்டுமே தொடர் கொலைகள் குறித்த காவல் துறையினரின் புலனாய்வை மையப்படுத்தியவை. அந்த வரிசையில் […]
பிரேமலு – மமிதா பைஜு ரசிகர்கள் வரிசையில் நிற்கவும்..!
மலையாளத் திரைப்படங்களைப் போல நாமும் குடும்பச் சித்திரங்களை எடுக்கலாமே என்ற குரல்கள் அவ்வப்போது நம்மவர்களிடம் இருந்து கேட்கும். டிஜிட்டல் தொழில்நுட்பம் வளர்ந்தபிறகு, கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக மலையாளப் படங்களைப் போல ‘ஸ்டைலிஷான மேக்கிங்’ வேண்டும் என்றும் உரையாடல்கள் தொடங்கியிருக்கின்றன. இத்தனைக்கும் ‘கொடுத்துப் பெறும் கொள்கை’யின் அடிப்படையில், நம்மூர் சினிமாவில் இருந்து அவர்கள் தாக்கம் பெறுவது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டுதானிருக்கிறது. அந்த வரிசையில், காதலைக் கொண்டாட்டத்துடன் திரையில் சொல்லும் ஒரு படைப்பாக அமையுமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது […]





