புரட்சி முழக்கங்களுடன் தூக்குமேடைச் சென்ற பாலு!

மறுநாள் காலையில் 4.30 மணிக்கு தூக்கிலிடப் போகிறார்கள். அன்று இரவு முழுவதும் அவர் தூங்கவில்லை. “செங்கொடி ஏந்தி வாரீர் திரண்டு ஒன்றாய்” என்ற பாட்டையும் மதுரை ஜெயிலில் அடிபட்டு மாண்ட தியாகியின் மீதுள்ள பாட்டையும், “செங்கொடி என்றதுமே எனக்கோர் ஜீவன் பிறக்குதம்மா – அதில் நம் கொடி என்பதிலோர் நாதம் பிறக்குதம்மா! என்னைத் தூக்கிலிட்டாலும் ஊக்கம் பிறக்குதம்மா” என்பன போன்ற புரட்சிப் பாடல்களைப் பாடிக்கொண்டே இருந்தார். ஏ – செல் தூக்குக் கொட்டடியின் அருகில் இருக்கிறது. அதில் […]

எதிர்காலத்தை ஆளப்போகும் ஏ.ஐ தொழில்நுட்பம்!

இந்தியப் பதிப்பாளர்கள் கூட்டமைப்புடன் இணைந்து வாருங்கள் வாசிப்போம் அமைப்பும் சென்னைப் புத்தகக் குழுவும் சேர்ந்து, எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பாளர்களுக்கான ஒருநாள் கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தன. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற்ற இந்த ஒரு நாள் முழு கருத்தரங்கிற்கு தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் முனைவர் ஔவை அருள் தலைமை தாங்கினார். எழுத்தாளரும் பதிப்பாளருமான கோ.ஒளிவண்ணன் ஒருங்கிணைப்பில் இந்த நிகழ்வு நடைபெற்றது. அவரே வரவேற்புரையும் ஆற்றினார். இந்த கருத்தரங்கில் கவிஞர் மனுஷ்யபுத்திரன், செயற்கை நுண்ணறிவு ஆய்வாளர் […]

மண்வளம் காக்க புதியத் திட்டம்!

விளைநிலங்களில் உரங்களின் பயன்பாட்டைக் குறைத்து, மண்வளத்தைக் காக்க ரூ.206 கோடியில் புதிய திட்டம் தமிழக அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் பயிா்க் கடன் வழங்க ரூ.16,500 கோடிக்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துவரை, எள், சூரியகாந்தி போன்ற பணப் பயிா்களைப் பெருக்குவதற்கான திட்டத்துக்கு ரூ.40.27 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக, வேளாண்மை மற்றும் அது சாா்ந்த துணைத் துறைகளுக்கான திட்டங்களைச் செயல்படுத்த வரும் நிதியாண்டுக்கு ரூ.42,281.88 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வேளாண் நிதிநிலை […]

நீதிக்கட்சியும், சமூக நீதியும்!

நூல் விமர்சனம்: * இன்றைய தலைமுறையினருக்கு வரலாற்றை நினைவுபடுத்த வேண்டியது நமது கடமை. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் தற்போது ‘சமூக நீதி’ என்ற சொல் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது. அந்த சொல்லுக்குப் பின்னால் இருக்கும் வரலாறும் அரசியலும் இந்த இளைஞர்களுக்கு தெரிந்தாக வேண்டும். அத்தோடு சமூக நீதிக்கு காரணமான, நூற்றாண்டு இயக்கமான ‘நீதிக்கட்சி’ பற்றியும் அறிந்து கொள்வதற்கு ஒரு கையடக்கமான ஆவணமாக இந்த நூல் அமைந்துள்ளது! * திராவிடர் கழகத்தின் செயலவைத் தலைவராக இருந்தவரும் சமீபத்தில் மறைந்த […]

பட்ஜெட்  உரையில் எம்.ஜி.ஆரை நினைவு கூர்ந்த தென்னரசு!

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இந்த நிலையில், தமிழக அரசின் 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று தாக்கல் செய்தார். காலை 10 மணிக்கு பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கி, பகல் 12.07 மணிக்கு நிறைவு செய்தார். நிதித்துறை பொறுப்பை ஏற்ற பிறகு, தங்கம் தென்னரசு முதல்முறையாக தாக்கல் செய்த பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது. பட்ஜெட் […]

உ.வே.சாவின் தமிழ்ப் பணிக்கு எதுவும் ஈடாகாது!

பிருந்தா சாரதி இன்று தமிழின் தொன்மை என்று நாம் பெருமிதம் கொள்ளும் பல நூல்களை ஓலைச்சுவடிகளில் இருந்து மக்கி மண்ணுக்குப் போகாமல் அச்சுக்கு மாற்றி அவற்றை அழியாமல் காத்தவர் உ.வே. சுவாமிநாதையர். அதற்காக அவர் செலவழித்த நேரம், பொருள், பயணம், உழைப்பு இவற்றுக்கு ஈடாக எதைக் கொடுத்தாலும் நிறைவு செய்ய முடியாது. அதை எதிர்பார்த்தும் அவர் உழைக்கவில்லை. தமிழ் மீது கொண்ட ஆர்வம்…. காதல்…. ஒரு காலகட்டத்தின் தேவையை ஒரு மனிதரைக்கொண்டு காலம் நிறைவேற்றிக் கொண்டது. ஒரு […]