மூன்று முதல்வர்களுடன் சிறு குழந்தையாக…!
அருமை நிழல்: மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை வைத்துப் பல திரைப்படங்களை எடுத்தவர் ஆர்.எம்.வீரப்பன். அதோடு, ‘தெய்வத் தாய்’, ‘காவல்காரன்’ எனப் பல படங்களைத் தயாரித்தவர். அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உள்ளிட்ட மூன்று தமிழக முன்னாள் முதல்வர்கள் மற்றும் இயக்குநர் ப.நீலகண்டன் ஆகியோருடன் சிறு குழந்தையாக காட்சியளிப்பவர் எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகளும், சென்னை ராமாபுரத்தில் செயல்பட்டு வரும் டாக்டர் எம்.ஜி.ஆர் காது கேளாதோர் மற்றும் வாய்பேச முடியாத மாணவர்களுக்கான சிறப்புப் பள்ளியின் தாளாளருமான கலைமாமணி டாக்டர்.லதா ராஜேந்திரன். […]
குழந்தைப் பருவத்திலேயே பல ஸ்டார்களுடன் கமல்!
‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில் ஜெமினி, சாவித்ரியுடன் சேர்ந்து நடித்த கமலுக்கு எம்.ஜி.ஆர், சிவாஜியுடன், எஸ்.எஸ்.ஆர் என்று அந்தக்காலத்திய பல முன்னணி ஸ்டார்களுடனும் இணைந்து நடிக்கிற வாய்ப்பு கிடைத்தது. அவ்வை சண்முகத்தின் நாடகக்குழுவில் இணைந்து நடித்து அதன் மூலம் கிடைத்த பயிற்சி என்று கமலுக்கு இளம் வயதிலேயே அருமையான நடிப்புச் சூழல் ! தன்னுடைய முதல் படத்தில் “அம்மாவும் நீயே.. அப்பாவும் நீயே” என்ற பாடலை கமலுக்குப் பின்னணி பாடியவரான எம்.எஸ்.ராஜேஸ்வரி பின்னாளில்- மணிரத்னத்தின் இயக்கத்தில் கமல் நடித்த […]
வளரும் ஸ்டார்கள்!
அருமை நிழல்: * தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிற சூர்யாவும், கார்த்தியும் இளம் வயதில் – சந்தோஷமானதொரு தருணத்தில்!
வித்தியாசமான தோற்றத்தில் அண்ணா!
அருமை நிழல்: 1950-களில் ‘ஹோம்லேண்ட்’ என்ற பத்திரிகை வளர்ச்சி நிதிக்காக நடந்த நாடகத்தில் பேரறிஞர் அண்ணா நடித்த பின்பு, வேஷம் கலைக்காத நிலையில் அண்ணா. இந்த நிதியளிப்பு நிகழ்ச்சிகாக முக்கிய பங்காற்றிய முன்னாள் அமைச்சர்கள் எஸ்.டி.சோமசுந்தரம், பண்ருட்டி எஸ். ராமச்சந்திரன், வி.வி. சுவாமிநாதன், திண்டுக்கல் ஆழகர்சாமி, பூவை இராமனுஜம் ஆகியோருடன் அப்போது அந்தப் பல்கலைக் கழக மாணவராக இருந்த பழ.நெடுமாறன் உடனிருக்கிறார். இந்த நிகழ்வில் நாவலர் நெடுஞ்செழியன், மதியழகன் ஆகியோரும் பங்கேற்றனர். நன்றி: வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணனின் முகநூல் […]
அன்பால் கை கோர்த்த நண்பர்கள்!
அருமை நிழல்: நடிகர் சங்கக் கட்டடத்தின் அடிக்கல் நாட்டு விழாவுக்கு வந்த பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆரை, அப்போதைய நடிகர் சங்கத் தலைவரான சிவாஜி கணேசன் வர, எம்.ஜி.ஆர்., நாகேஷின் கையை பிடித்து அழைத்து வரும் காட்சிதான் இது. அப்போது செயற்குழு உறுப்பினராக இருந்த நாகேஷ் பின்னால் வர, அருகில் நடந்து வருபவர் நவரசத் திலகம் முத்துராமன்.
நட்புக்கு மதிப்பளிக்கும் நட்சத்திரங்கள்!
அருமை நிழல்: டோலிவுட் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியும் கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் திரைத்துறைக்கு அறிமுகமானதிலிருந்தே நல்ல நண்பர்கள். இவர்கள் இருவரும் தாங்கள் நடிக்கும் படங்களில் கௌரவ தோற்றத்தில் வந்துபோவது வழக்கமான ஒன்று. அப்படி, சிரஞ்சீவி நடிப்பில் 1989 ல் வெளியான ‘ராஜா விக்ரமார்கா’ படத்துவக்கக் காட்சியில், ரஜினிகாந்த் கிளாப் அடித்துக் கொடுத்தார். அருகில் அப்போதைய முன்னணி நடிகைகளான அமலாவும் ராதிகாவும் உள்ளனர். மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘ராஜா விக்ரமார்கா’ படம் சிரஞ்சீவியின் சினிமா வரலாற்றில் மறக்க முடியாத […]





