கொரோனாவுக்குப் பிறகு நுரையீரல் பாதிப்பு அதிகரிப்பு!

கொரோனா பெருந்தொற்றால் ஏற்படும் நுரையீரல் சார்ந்த பிரச்சினைகள் குறித்து வேலூரில் உள்ள கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி (சிஎம்சி) மருத்துவமனை ஒரு ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வுக் கட்டுரை பிஎல்ஓஎஸ் என்ற சுகாதார இதழில் வெளியாகியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனாவுக்குப் பிறகு ஐரோப்பியர்கள் மற்றும் சீனர்களைவிட இந்தியர்கள் நுரையீரல் சார்ந்த பிரச்சினைகளால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். நுரையீரல் சார்ந்த பிரச்சினை சிலருக்கு ஒரு வருடம் வரை நீடிக்கிறது. மீதமுள்ளவர்கள் வாழ்நாள் முழுவதும் அந்த பிரச்சினையுடன் வாழ வேண்டிய நிலையில் உள்ளனர். […]

அறியாமையை அகற்றினால் ஆரோக்கியம் கிடைக்கும்!

– சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியுடன் ஒரு நேர்காணல் சுறுசுறுப்பான 72 வயது இளைஞன். சம்மணம் கட்டி அமர்ந்த இடத்திலிருந்து, கைகளைக் கீழே ஊன்றாமல் நொடியில் எழுந்து நிற்கிறார். முதுமைக்குரிய எந்த சுவடுகளும் இன்றி தேனீயைப் போன்று இயங்கிக்கொண்டே இருக்கும் முன்னாள் சென்னை பெருநகர மேயர் சைதை துரைசாமி அவர்களை சந்தித்துப் பேசினோம். பெரும்பாலான மனிதர்கள் 58 வயதில் ஓய்வு பெற்றதும் தங்களுடைய வேலை நேரத்தை சுருக்கிக் கொள்கிறார்கள். ஆனால் 60 வயதில் மேயர் பதவிக்கு […]

இட்லியை முந்திய தோசை!

உலகிலேயே 10ஆவது சிறந்த உணவாக நம்ம ஊர் தோசைக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. தி டேஸ்ட் அட்லாஸ் என்ற உணவு நிபுணத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வில் சிறந்த உணவாக (best pancake) தோசை தேர்வாகியுள்ளது. என்னடா இது, நம்ம இட்லிக்கு வந்த சோதனை.

உணவு எடுத்துக் கொள்வதில் நெறிமுறை அவசியமா?

இரவு உணவிற்கு சிறந்த நேரம் எது என்ற கேள்விக்கு பதிலளிப்பதற்கு முன், நாம் செய்யும் தவறுகளைப் புரிந்துகொள்வது நல்லது. அதேபோல் சரியான நேரத்தில் சாப்பிடுவதை உறுதிசெய்ய சிலவற்றை புரிந்துக் கொள்வதும் பொருத்தமானது. இரவு உணவு எடுத்துக் கொள்ளும் முறை குறித்து ஊட்டச்சத்து நிபுணர்களின் அளித்துள்ள விளக்கங்களைப் பார்க்கலாம்: இரவு உணவுக்குப் பிறகு சிற்றுண்டி வேண்டாம். இரவு உணவு உண்ட உடனே படுக்க வேண்டாம். உடல் எடையைக் குறைக்க இரவு உணவில் கார்போ ஹைட்ரேட்டுகளைத் தவிர்ப்பது நல்லது. தூங்குவதற்கு […]

ஆரோக்கியத்திற்காக பழைய சோற்றைப் பரிந்துரைக்கும் மருத்துவர்கள்!

உணவே மருந்து என்பதை இந்த தலைமுறையினர் சுத்தமாக மறந்துவிட்டனர். மிகச் சிறந்த உணவுமுறையைப் பின்பற்றி வந்ததால்தான் அன்றைய தமிழர்கள் ஆரோக்கியத்தோடும் நீண்ட ஆயுளோடும் வாழ்ந்தார்கள். அந்த உணவுமுறையை நாம் பின்பற்றத் தவறியதால் மருத்துவமனையை நோக்கி ஓடும் சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். நாம் அன்றாடம் உண்ணும் உணவில் தேவையான பாக்டீரியாக்கள் இல்லாததால்தான் பலவித குடல் சார்ந்த வயிற்றுப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இந்த வகையான குடல் சார்ந்த பிரச்சினைகளுக்கு பழைய சோறு மூலம் கிடைக்கப் பெறும் பாக்டீரியாக்கள் வயிற்றுப் பிரச்சனைக்கு தீர்வுகள் […]

மண் பாத்திரத்தின் மகத்துவம்!

இன்று நவீன யுகத்தில் நாகரீகம் என்ற பெயரில் நாம் இலகுவாக செய்யக்கூடிய வகையில் பாத்திரங்கள் உருமாறி இருக்கிறது. குறிப்பாக ஸ்டிக் பாத்திரங்களின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. இவை நமக்கு ஆரோக்கியத்தை தருகிறதா? என்றால் அவை கேள்விக்குறியாக தான் உள்ளது. நமது முன்னோர்கள் எவ்வளவு ஆரோக்கியமாக வாழ்ந்திருக்கிறார்கள். நோய்கள் எதுவும் இல்லாமல் இருந்திருக்கிறார்கள் என்று என்றாவது நீங்கள் யோசித்துப் பார்த்ததுண்டா? அதற்கு என்ன காரணம் என்று நீங்கள் சிந்தித்துப் பார்த்தால் உங்களுக்கு மிக எளிதில் விடை கிடைக்கும். இன்று சமையல் […]