என்னிடம் தலையைக் காட்ட வந்திருக்கிறீர்களே?
பரண் :
சென்னையில் நடந்த ஒரு ஹியூமர் கிளப் மாநாடு. அதில் பேசியவர் பிரபல நரம்பியல் நிபுணரான டாக்டர்.பி.ராமமூர்த்தி.
மாநாட்டில் அவர் நினைவுகூர்ந்த ஒரு சம்பவம்.
கலைஞர் (கருணாநிதி) ஒரு முறை உடல்நலம் குன்றிப் படுத்திருந்தபோது, அவரைச் சந்திக்கப் போயிருந்தேன்.
“அவசர வேலை. உடனே போக வேண்டியிருக்கிறது’’ என்று நான் சொன்னதும், கலைஞர் பட்டென்று சொன்னார்.
“என்ன டாக்டர்! எல்லோரும் உங்களிடம் தலையைக் காட்டுகிறார்கள். நீங்கள் என்னடா என்றால், என்னிடம் தலையைக் காட்ட வந்திருக்கிறீர்களே?’’