அருள்நிதியின் ‘கழுவேத்தி மூர்க்கன்’ டைட்டில் வெளியீடு!
வித்தியாசமான கதைகள் மூலம் பார்வையளர்களுக்கு நல்ல படைப்புகளைத் தர வேண்டும் என்ற ஒத்த சிந்தனை உள்ளவர்கள் ஒன்றுசேரும்போது அதன் ரிசல்ட் நிச்சயம் ஈர்க்கக்கூடிய ஒன்றாக இருக்கும்.
அந்த வகையில் நடிகர் அருள்நிதி, தன்னுடைய கதைத் தேர்வு மற்றும் நடிப்பால் சினிமா ஆர்வலர்களையும் ரசிகர்களையும் ஈர்க்கத் தவறவில்லை.
சமீபத்தில் வெளியான அவருடைய படங்கள் பாக்ஸ் ஆஃபீஸிலும் வெற்றியைக் கண்டதை அடுத்து இந்த வருடம் எதிர்ப்பார்ப்பில் இருக்கக்கூடிய பல படங்களை அடுத்தடுத்து கைவசம் வைத்துள்ளார்.
அந்த வகையில், ஒலிம்பியா மூவிஸ் அம்பேத்குமார் தயாரிப்பில், ‘ராட்சசி’ படப்புகழ் சை கெளதம ராஜ் இயக்கத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்கும் புதிய படமான ‘கழுவேத்தி மூர்க்கன்’ அறிவிக்கப்பட்டுள்ளது.
‘சார்பட்டா பரம்பரை’, ‘நட்சத்திரம் நகர்கிறது’ போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்த துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார்.
இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றதோடு படம் குறித்தான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.