மீண்டும் ஒரு பயோபிக்கில் நடிக்கும் சூர்யா!
தற்போது சிவா இயக்கத்தில் ஒரு வரலாற்று படத்தில் நடித்துவருகிறார் சூர்யா. சூர்யா 42 என அழைக்கப்படும் அந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது.
இந்த நிலையில், படப்பிடிப்பு சில மாதங்களில் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சூர்யாவின் அடுத்த படம் பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மலையாள நடிகர் பிரித்விராஜூடன் கூட்டணி சேர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிலும் பிரிட்டானியா நிறுவனத்தின் ராஜன் பிள்ளை வாழ்க்கை வரலாற்றுக் கதையில்தான் சூர்யா நடிக்க இருக்கிறார் எனக் கூறப்படுகிறது.
அதை இயக்குபவர் பிரித்விராஜ் இயக்க உள்ளதாகவும் இந்தப் படத்திற்கான முதற்கட்ட பணிகளில் பிரித்விராஜ் ஈடுபட்டுவருவதாகவும் தகவல்கள் வெளியானாலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
ராஜன் பிள்ளையின் கதை பல்வேறு திருப்பங்கள் நிறைந்தது, அவர் சிறையில் மர்மமான முறையில் இறந்தது பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.