13 வேடங்களில் நடிக்கும் சூர்யா!
’கோப்ரா’ படத்தில் விக்ரம் 8 கெட்டப்புகளிலும், ’தசாவதாரம்’ படத்தில் கமல்ஹாசன் 10 கெட்டப்புகளிலும் நடித்திருந்த நிலையில் இருவரையும் மிஞ்சும் வகையில் சூர்யா தனது 42 -வது படத்தில் 13 கெட்டப்புகளில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் ஞானவேல்ராஜா பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ’சூர்யா 42′ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற உள்ளதாகவும் முழுக்க முழுக்க இரவில் மட்டுமே படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் 45 நாட்கள் படப்பிடிப்பை நடத்த முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
படத்தில் வரலாற்று சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகப்பெரிய பொருட்செலவில் செட் அமைத்து படமாக்க உள்ளதாகவும் இதற்காகவே பல கோடிகள் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டு வரும் நிலையில் முதல் கட்டமாக முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடித்து விட்டு அதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கிய பின்னர் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
2 பாகங்களின் படப்பிடிப்பு முடிந்த பின்னரே முதல் பாகம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
1000 வருடங்களுக்கு முந்தைய சரித்திர கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் சூர்யா அரத்தர், வெண்காட்டார், முக்காட்டார், மண்டாங்கர், பெருமனத்தார் ஆகிய கேரக்டர்களில் நடிக்கவுள்ளார்.
தமிழ் உள்பட 10 மொழிகளில் உருவாக இருக்கும் இந்தப் படத்தில் சூர்யா ஜோடியாக திஷா பதானி நடித்து வருகிறார்.
இந்தப் படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவில் நிஷா யூசுப் படத்தொகுப்பில் இந்தப் படம் உருவாகி வருகிறது.