அண்ணா பிறந்த நாளைக் கொண்டாடிய எம்.ஜி.ஆர்.
அருமை நினைவு:
1966 ஆம் ஆண்டு நடந்த ‘அண்ணா பிறந்த நாள் விழா’வுக்கான அழைப்பிதழ் இது. இதை வெளியிட்டது எம்.ஜி.ஆர் ஆசிரியராக இருந்த ‘சமநீதி’ இதழ்.
விழாவை நடத்தியது எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம். ‘கலைஞர் திருவிழா’ என்ற பெயரில் எம்.எஸ்.வி இசைக் கச்சேரி. ஜெயலலிதாவின் நடன நிகழ்ச்சி.
வில்லுப்பாட்டுடன் நடந்த நிகழ்ச்சியில் கே.ஆர்.ராமசாமி, கூடவே அசோகனின் பெயர்களும் இடம் பெற்றிருப்பது சிறப்பு.