நாட்டு நடப்பு

விவசாயிகளின் கோரிக்கைகள் பரீசலிக்கப்படட்டும்!

தலையங்கம்: நமது தேசத் தந்தையாக நாம் இன்றும் சொல்லிவருகிற மகாத்மா காந்தி, “அசலான இந்தியா கிராமங்களில்தான் இருக்கிறது” என்பதைத் தனது வாழ்நாள் இறுதிவரை சொல்லிக்கொண்டே இருந்தார். அப்படிப்பட்ட கிராமங்களின் உயிரைப் போன்றவர்கள் விவசாயிகள். அவர்களை மீண்டும் மீண்டும் போராட்டக்களத்திற்கு வரவைத்திருக்கிறது இந்தியாவிலுள்ள பொருளாதாரச் சூழலும், அரசியல் சூழலும். சில ஆண்டுகளுக்கு முன்பு தான் இதே வடமாநிலப் பகுதிகளில் குறிப்பாக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து டெல்லியை நோக்கி விவசாயிகள் நூற்றுக்கணக்கான நாட்களுக்கு மேல் போராடி, பல உயிர்களைப் […]

பாலின ஏற்றத்தாழ்வுகளை நேர் செய்வதில் கல்வியின் பங்கு!

பாலியல்’ மற்றும் ‘பாலினம்’ (Sex and Gender) ‘பாலியல்’ என்ற சொல் உடற்கூறியல் மற்றும் உடலியல் வேறுபாட்டைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது, அதே சமயம் ‘பாலினம்’ என்ற சொல் ஆண் மற்றும் பெண் இடையே கலாச்சார, சமூக மற்றும் உளவியல் வேறுபாடுகளைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. ‘பாலியல்’ என்பது உயிரியல் சார்ந்தது. ஒரு பெண் பாலினத்தால் ஆணாகவும், ஆண் பாலினத்தால் பெண்ணாகவும் இருக்கலாம். ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான நடத்தை வேறுபாடுகளை விளக்க பல வாதங்கள் உள்ளன. இந்த வேறுபாடுகள் உயிரியல் […]

புரட்சி முழக்கங்களுடன் தூக்குமேடைச் சென்ற பாலு!

மறுநாள் காலையில் 4.30 மணிக்கு தூக்கிலிடப் போகிறார்கள். அன்று இரவு முழுவதும் அவர் தூங்கவில்லை. “செங்கொடி ஏந்தி வாரீர் திரண்டு ஒன்றாய்” என்ற பாட்டையும் மதுரை ஜெயிலில் அடிபட்டு மாண்ட தியாகியின் மீதுள்ள பாட்டையும், “செங்கொடி என்றதுமே எனக்கோர் ஜீவன் பிறக்குதம்மா – அதில் நம் கொடி என்பதிலோர் நாதம் பிறக்குதம்மா! என்னைத் தூக்கிலிட்டாலும் ஊக்கம் பிறக்குதம்மா” என்பன போன்ற புரட்சிப் பாடல்களைப் பாடிக்கொண்டே இருந்தார். ஏ – செல் தூக்குக் கொட்டடியின் அருகில் இருக்கிறது. அதில் […]

எதிர்காலத்தை ஆளப்போகும் ஏ.ஐ தொழில்நுட்பம்!

இந்தியப் பதிப்பாளர்கள் கூட்டமைப்புடன் இணைந்து வாருங்கள் வாசிப்போம் அமைப்பும் சென்னைப் புத்தகக் குழுவும் சேர்ந்து, எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பாளர்களுக்கான ஒருநாள் கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தன. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற்ற இந்த ஒரு நாள் முழு கருத்தரங்கிற்கு தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் முனைவர் ஔவை அருள் தலைமை தாங்கினார். எழுத்தாளரும் பதிப்பாளருமான கோ.ஒளிவண்ணன் ஒருங்கிணைப்பில் இந்த நிகழ்வு நடைபெற்றது. அவரே வரவேற்புரையும் ஆற்றினார். இந்த கருத்தரங்கில் கவிஞர் மனுஷ்யபுத்திரன், செயற்கை நுண்ணறிவு ஆய்வாளர் […]

மண்வளம் காக்க புதியத் திட்டம்!

விளைநிலங்களில் உரங்களின் பயன்பாட்டைக் குறைத்து, மண்வளத்தைக் காக்க ரூ.206 கோடியில் புதிய திட்டம் தமிழக அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் பயிா்க் கடன் வழங்க ரூ.16,500 கோடிக்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துவரை, எள், சூரியகாந்தி போன்ற பணப் பயிா்களைப் பெருக்குவதற்கான திட்டத்துக்கு ரூ.40.27 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக, வேளாண்மை மற்றும் அது சாா்ந்த துணைத் துறைகளுக்கான திட்டங்களைச் செயல்படுத்த வரும் நிதியாண்டுக்கு ரூ.42,281.88 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வேளாண் நிதிநிலை […]

நீதிக்கட்சியும், சமூக நீதியும்!

நூல் விமர்சனம்: * இன்றைய தலைமுறையினருக்கு வரலாற்றை நினைவுபடுத்த வேண்டியது நமது கடமை. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் தற்போது ‘சமூக நீதி’ என்ற சொல் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது. அந்த சொல்லுக்குப் பின்னால் இருக்கும் வரலாறும் அரசியலும் இந்த இளைஞர்களுக்கு தெரிந்தாக வேண்டும். அத்தோடு சமூக நீதிக்கு காரணமான, நூற்றாண்டு இயக்கமான ‘நீதிக்கட்சி’ பற்றியும் அறிந்து கொள்வதற்கு ஒரு கையடக்கமான ஆவணமாக இந்த நூல் அமைந்துள்ளது! * திராவிடர் கழகத்தின் செயலவைத் தலைவராக இருந்தவரும் சமீபத்தில் மறைந்த […]